Share on Social Media


சென்னை: தமிழகத்தில் நேற்று 1,75,033 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22,651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,75,033 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 22,651 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,95,402 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 12,513 பேர் ஆண்கள், பெண்கள் 10,138 பேர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 33,646 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,68,968 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 190 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 273 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 26,128 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய மொத்த பாதிப்பில் அரியலூர் 246, சென்னையில் 1971 பேர், செங்கல்பட்டு 909, கோவை 2810, கடலூர் 488, தர்மபுரி 318, திண்டுக்கல் 308, ஈரோடு 1,619, கள்ளக்குறிச்சி 243, காஞ்சிபுரம் 388, கன்னியாகுமரி 712, கரூர் 337, கிருஷ்ணகிரி 377, மதுரை 481, நாகப்பட்டினம் 516, நாமக்கல் 719, நீலகிரி 515, பெரம்பலூர் 209, புதுக்கோட்டை 288, ராமநாதபுரம் 171, ராணிப்பேட்டை 306, சேலம் 1,187, சிவகங்கை 187, தென்காசி 226, தஞ்சாவூர் 1004, தேனி 445, திருப்பத்தூர் 341, திருவள்ளூர் 583, திருவண்ணாமலை 497, திருவாரூர் 576, தூத்துக்குடி 365, நெல்லை 256, திருப்பூர் 1161, திருச்சி 689, வேலூர் 271, விழுப்புரம் 521, விருதுநகர் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 22,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *