Share on Social Media


சென்னை: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 626 ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ஆம் கட்ட தேர்தலில் 6,652 வாக்குச்சாவடிகளில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்கு பதிவானது. 2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் 12ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 பதவி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 106 கிராம ஊராட்சி தலைவர், 630 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவசைலம் ஊராட்சி 3வது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது. பொது வாக்குச்சாவடி அமைத்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் 2வது வார்டு மக்கள் 3வது வார்டில் வாக்கு செலுத்தினர். 2வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வான நிலையில் அந்த வார்டை சேர்ந்த 45 பேர் 3வது வார்டுக்கு வாக்களித்ததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கானை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, தியாகதுருகம் ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

வேலூரில் அணைக்கட்டு, கணியம்பாடி, திருப்பத்தூரில் ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராணிப்பேட்டையில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தென்காசியில் கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிக்குளம், செங்கோட்டை, தென்காசி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *