Share on Social Media


சென்னை: தமிழகத்தில் 3077 கி.மீ நீளத்திற்கான 25 ரயில்வே திட்டங்கள் ரூ.28,307 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: ரயில்வே திட்டங்கள் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து இருக்கும் என்பதால், அவற்றுக்கு மாநிலவாரியாக அல்லாமல், ரயில்வே மண்டலம் வாரியாகத்தான் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டை உள்ளடக்கி மொத்தம் 3077 கி.மீ நீளத்திற்கான 25 ரயில்வே திட்டங்கள் ரூ.28,307 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தொடர்வண்டி கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2009-14 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.879 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. இது 2014-19 காலத்தில் ஆண்டுக்கு ரூ.1979 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3730 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இதுதான் மிகவும் அதிகமாகும். இது 2009-14 காலத்தின் சராசரியை விட 234% அதிகம். மொரப்பூர் – தர்மபுரி இடையிலான 36 கி.மீ நீள புதிய ரயில்வே பாதை திட்டம் ரூ.134 கோடி மதிப்பீட்டில் 2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.359 கோடி ஆகும். இதை விரைவாக முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *