Share on Social Media


தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக உள்ளாட்சித்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ’ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மற்றும் குளம் புனரமைப்பு பணிகளை’ ஆய்வு செய்தார். மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவுள்ள ’சி.வ.’ குளத்தில் ரூ.11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் புனரமைப்புப் பணிகளான கரைகளை பலப்படுத்துதல், வரத்துக் கால்வாயைச் சீர்செய்தல், தூர்வாருதல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் ரூ.50 கோடி செலவில் நடைபெற்று வரும் ’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வில் அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

ஆய்வில் அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

அத்துடன், திட்டம் நிறைவு பெறும் காலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *