Share on Social Media


சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினசரி 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று  சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் நேற்று மாலை கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.  பிறகு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:  தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினால்தான் உயிர் இழப்பை குறைக்க முடியும். தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு அளித்திட வேண்டும். தேவையான ஆக்சிஜனை பிரதமர் அனுப்ப வேண்டும்.

நோய் பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்களை அதிகளவு அரசு நடத்த வேண்டும். இன்றைய சூழலில் தினமும் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடக்கிறது. இதனை 3 லட்சம் பேருக்கு என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும்.
அப்போதுதான் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்த முடியும். பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் 24 மணி நேரத்தில் முடிவை தெரிவிக்க முடியும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *