Share on Social Media



சென்னை: தமிழகத்தில் மேலும் 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 (8,48,724) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 449  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,48,724 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 461 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,32,167 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,466 ஆக உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 4; தனியார் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 151 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,34,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,71,70,947 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,202 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 4,091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,12,864 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 279 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,35,825 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 170 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *