Share on Social Media



அனைத்து மாவட்டங்களிலும் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு போடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் 8-ந் தேதி முதல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு போடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 48 நாட்களில் (நேற்று முன்தினம் வரையில்) 11 லட்சத்து 45 ஆயிரத்து 88 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 260 பேர் மீதும் கடந்த 25-ந்தேதி 10 ஆயிரத்து 942 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்துக்காக இதுவரை 53 ஆயிரத்து 780 வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக இதுவரை 13 ஆயிரத்து 91 வழக்குகள் பதிவாகி உள்ளன.


https://www.youtube.com/watch?v=videoseries





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *