Share on Social Media


சென்னை: திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 65 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிற வியக்கதக்க மகத்தான சாதனைகளை நாடும், நாட்டு மக்களும் பாராட்டி வருகிறார்கள். தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற உன்னதமான ஆட்சியை செய்வதாக கட்சி வேறுபாடின்றி பாராட்டுகிறார்கள். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற மிகப் பெரிய ஊழல்கள் இனி நடைபெறாது என நாட்டு மக்கள் எண்ணி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 இந்த மகிழ்ச்சியின் காரணமாக தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்து பாராட்டுகிறோம். உலகமே கொரோனாவினால் உயிருக்கு பயந்து இருந்த போது, ‘நீங்கள் மட்டும், மக்கள் உயிர் தான் முக்கியம், எனது உயிர் முக்கியம் அல்ல என்று துணிந்து, கோவையில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்குள் சென்று நேரடியாக விசாரித்து தைரியமும் ஆறுதலும் கூறியதை மறக்க முடியுமா?’. இதை அறிந்த மக்கள் உங்களை மனதார பாராட்டி வாழ்த்துகிறார்கள் என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *