Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • தனுஷ் ரஜினி பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்
  • தனுஷ் ரஜினி வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

கோலிவுட்,பாலிவுட் ,ஹாலிவுட் என அனைத்திலும் அசத்தி வருகிறார் தனுஷ். இவர் நடித்த ஹிந்தி திரைப்படமான அத்ராங்கி ரே வரும் டிசம்பர் 24 ஆம் தேதி ottயில் வெளிவருகிறது. தனுஷுடன் அக்ஷய்குமாரும் இணைந்து நடித்த இப்படத்திற்கு இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைத்திருக்கின்றார்.

அத்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளிவருகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனல் வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தனுஷ் தான் ரஜினி பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரின் மருமகனும் ஆவார். ரஜினியின் முதல் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பொல்லாதவன் படிக்காதவன் மாப்பிள்ளை என ஒரு சில படங்களுக்கு ரஜினியின் பட தலைப்பை பயன்படுத்தியுள்ளது மட்டுமில்லாமல் மிஸ்டர் பரத் படத்தில் இடம்பெற்ற என்னமா கண்ணு பாடலை ரீமேக் செய்து நடித்துள்ளார்.

Dhanush:கட்டாயக் கல்யாணம்: மனைவி பிடிக்காமல் பிரியும் தனுஷ்

மேலும் நடிப்பு ,சண்டைக்காட்சி , ஸ்டைலாக புகைப்பிடிப்பது என பல இடங்களில் ரஜினியின் தாக்கம் இவரிடம் இருப்பதை ரசிகர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளனர். ஆதலால் ரஜினி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் பட்சத்தில் தனுஷ் ரஜினி வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.