Share on Social Media


நிதி ஆயோக் அமைப்பின் 6-வது ஆட்சிக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்றால், தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் வளர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.” என்றார்.

6வது நிதி ஆயோக் கூட்டம்

6வது நிதி ஆயோக் கூட்டம்

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கவும், காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டின் பங்குகளை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *