Share on Social Media


கோவை:ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், தங்கள் பகுதிகளிலுள்ள மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். தனியாக வசிக்கும் முதியவர்களின் தேவைகள் நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவ தேவையை தவிர்த்து, யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.சில இடங்களில் மூத்த குடிமக்கள் மட்டும், வீடுகளில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கேட்டு, உதவி செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் போலீசாருக்கு அறிவுறுத்தியதாவது:ஊரடங்கு நேரத்தில், ரோந்து செல்லும் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள, மூத்த குடிமக்களின் மொபைல்போன் எண்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
அவ்வப்போது அவர்களை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை, வீடுகளுக்கே சென்று கொடுப்பதை, உறுதி செய்ய வேண்டும்.சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் விலங்குகளுக்கு சாப்பாடு போன்ற உதவிகளை செய்ய முன்வரும் நபர்களை, எவ்வித தொந்தரவும் செய்யாமல், அவர்களின் உண்மை தன்மையை விசாரித்து, சம்பந்தப்பட்ட சரக உதவி கமிஷனர் அல்லது மாநகர நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் பாஸ் வழங்க வேண்டும்.
அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு, வேலைக்கு செல்லும் நபர்களை சரியான முறையில் விசாரித்து அனுமதிக்க வேண்டும்.ரோடுகளில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தள்ளுவண்டியில் காய்கறி சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து போலீசாருக்கும், சுழற்சி முறையில், 20 சதவீத ஓய்வு வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *