vikatan 2019 11 4dc83390 d8f2 4448 a4a9 128027829bbe rajini Tamil News Spot
Share on Social Media

அவர் பேசுகையில், ` உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வதற்கு பா.ஜ.க தயாராக உள்ளது. நீங்கள் தனிக்கட்சி தொடங்கினால், அதனைப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையமும் தயாராக உள்ளது. எந்தவித தயக்கங்களும் உங்களுக்குத் தேவையில்லை. நீதிமன்ற உதவிகளும் வந்து சேரும். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதும் வைக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், நிச்சயமாக நீங்கள் தனிக்கட்சி தொடங்கி, களத்துக்குள் வர வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும் என்ற எந்த நிர்பந்தங்களும் உங்களுக்கு இல்லை’ என விவரித்தவர், அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது தொடர்பாகவும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, `அ.தி.மு.க-வை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வந்திருந்தால் இங்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கும். இப்போது நீங்கள் வந்தால் 2024 தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிரதமரும், தமிழர் உணர்வுகளை மையப்படுத்தியே பேசி வருகிறார்’ என்றார். ஆடிட்டர் கூறிய தகவல்களை முழுமையாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, `யோசித்துச் சொல்கிறேன்’ என வழக்கம்போல பதில் கூறிவிட்டார்” என்றனர் விரிவாக.

அதேநேரம், ரஜினி அரசியலுக்கு வருவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. `சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவரும் சூழலில் அரசியலில் களமிறங்குவது சரியானதாக இருக்காது. அதிலும், கொரோனா காலத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு எனக் களமிறங்கினால், உடல்நலனில்தான் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, எதைப் பற்றியும் யோசிக்காமல் சற்று ஓய்வெடுங்கள்’ எனக் குடும்பத்தினர் உறுதியாகக் கூறிவிட்டனர்.

இதன் காரணமாக, ட்விட்டரில் பதிவை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. இருப்பினும், `தேர்தல் காலம் நெருங்குவதால் தி.மு.க-வின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல வகைகளிலும் பா.ஜ.க முயன்று வருகிறது’ எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *