Share on Social Media


‘’2010 காலகட்டத்தில் ஆனந்த விகடன் கதை, கவிதைகளுக்கு ஓவியங்கள் தேடிக்கொண்டிருந்தபோது ஆன்லைனில் மிகத் தத்ரூபமான ஓவியங்கள் பார்த்தேன். வரைந்தது யார் எனத்தேடியபோது அங்கேயே இளையராஜா எனப்பெயரோடு தொடர்பு எண்ணும் இருந்தது. ‘’யாருமே போன் பண்ணிப் பேசனதுல இல்ல சார். அப்படியே எடுத்து பயன்படுத்திப்பாங்க. முதல்முறையா விகடன்ல இருந்துதான் என்கிட்ட பேசியிருக்கீங்க’ என மிகவும் சந்தோஷப்பட்டார்.

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

சிறுகதை, ஓவியங்களுக்கு தொடர்ந்து ஆனந்த விகடனில் இளையராஜாவின் ஓவியங்களைப் பயன்படுத்தினோம். ஒரு கட்டத்தில் இளையராஜாவின் ஓவியத்துக்கு ஏற்ப பல எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பினார்கள். விகடனில் ஓவியங்கள் வருவதற்கு முன்னர் மீடியேட்டர்கள் மூலம் தன்னுடைய ஓவியங்களை விற்றுவந்தார் இளையராஜா. இதில் அவருக்கு மிகச் சொற்பமான பணம் கிடைக்கும். ஆனால், விகடனில் இவரது ஓவியங்கள் வெளிவர ஆரம்பித்தப்பிறகு வெளிநாட்டிலும், நம்மூரிலும் இருந்தும் நேரடியாகவே இவரிடம் இருந்து ஓவியங்களை வாங்க ஆரம்பித்தார்கள். இவரின் பொருளாதார நிலையும் உயர ஆரம்பித்தது.

தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. இவரது இழப்பு ஓவிய உலகுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு’’ என்கிறார் ஆனந்த விகடன் குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளர் கே.பாண்டியன்.

கொரோனாவால் இன்னொரு தலைசிறந்த கலைஞனைப் பறிகொடுத்திருக்கிறோம். சிறு அலட்சியம்கூட பேராபத்தில் கொண்டுபோய்விடும் என்பதை உணர்வோம்!

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்

இளையராஜாவின் ஓவியம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *