Share on Social Media


போபால்: போபால் பாஜ., எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் தசரா விழாவில் பேசிய அவர், ராவணன் குறித்து பேசிய கருத்து தற்போது விவாதத்துக்குள்ளாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பிரக்யா தாக்கூர் கைது செய்யப் பட்டார். விசாரணையின்போது போலீசார் அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் தன்னுடைய முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய அவர் பல காலமாக சக்கர நாற்காலியில் அமர்ந்து பொது இடங்களுக்குச் சென்று வந்தார். இதுகுறித்து அவரது சகோதரி உப்மா தாகூரும் கூட்டங்களில் பேசியுள்ளார்.

சமீபத்தில் பிரக்யா சிங் தாக்கூர் விழா ஒன்றில் நடனமாடும் வீடியோவையும், கபடி விளையாடும் வீடியோவையும் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டார். இதன்மூலமாக பிரக்யாசிங் தாக்கூருக்கு முதுகு தண்டுவட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் சக்கர நாற்காலியில் பயணித்து மக்களை ஏமாற்றுகிறார் என்கிற ரீதியிலும் அவர் டிவிட்டரில் மறைமுகமாகக் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கு தற்போது பிரக்யாசிங் தாக்கூர் பதிலளித்துள்ளார். போபால் நகரின் சாந்த் நகர் பகுதியில் சிந்த் குடிமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களிடையே தசரா விழாவை முன்னிட்டு பிரக்யா சிங் தாக்கூர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

‘இந்த வீடியோவை வெளியிட்ட நபர் ராவணனாக இருக்க வேண்டும். அவருடைய அடுத்த பிறவியில் அதிக துன்பங்களை அனுபவிப்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.

latest tamil news

இதற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா பதிலளித்துள்ளார். அசுர குல அரசனான ராவணனின் கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு எங்கு சென்றாலும் ராவணனே கண்ணுக்குத் தெரிவார். பாஜ., எம்பி., பிரக்யாசிங் தாக்கூர் கெட்ட விஷயங்களை பிரதிபலிக்கும் ராவணனின் கொள்கைகளை பின்பற்றுகிறார் என்பது அவரது பேச்சின்மூலம் தெளிவாகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *