Share on Social Media


மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பு இல்லையென சுகாதாரத்துறை கைவிரித்துவிட்டது.

மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின் ஆட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 23,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,051 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 1485 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 167 பேரை வைரஸ் தாக்கியது. தினசரி பாதிப்பு 150 முதல் 250 வரை நீடிக்கிறது.

இருப்பினும் மக்கள் அலட்சியப்போக்கை கடைபிடிக்கின்றனர். இன்னொருபுறம் சற்றே தடுப்பூசி மீது பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலைமோதியது. நேற்றோடு முடிந்த 3 நாள் தடுப்பூசி திருவிழாவிலும் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ஆனால் திடீரென தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகாம்களுக்கு செல்வோரிடம் ‘தடுப்பூசி காலி’ என சுகாதாரத்துறையினர் கைவிரிக்கின்றனர்.

நேற்று மாலை நிலவரப்படி மாவட்ட நிர்வாகம் வசம் வெறும் 2600 டோஸ் தான் இருப்பு இருந்தது. புதிதாக தடுப்பு மருந்து ஒதுக்கப்படவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. மக்கள் ஆர்வத்திற்கு அரசே வேலி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் 2ம் டோஸ் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசிடம் தடுப்பு மருந்து கேட்டுள்ளோம். விரைவில் கிடைத்து விடும். முற்றிலும் தட்டுப்பாடு என்ற நிலை வராது என நினைக்கிறேன்’ என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *