Share on Social Media


கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் முறை உள்ளிட்ட தடுப்பூசி குறித்த எந்த விதமான தகவல்களையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலின்றி பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு கடுமையான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் கடுமையாக போராடி வருகிறது, இந்தியா. இதை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும், முகக்கவசங்களும் தான் ஒரே தீர்வு என்பதை அறிந்து அதை கூடிய விரைவில் ஒட்டுமொத்த மக்களுக்கும் கொண்டு சேர்க்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது மாநில அரசுகளின் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

இது குறித்த அறிவிப்பை அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகரான பிரதீப் ஹல்தாா், “இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக செலுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளின் இருப்பு, அவற்றின் பராமரிப்பு முறை குறித்த எந்தவொரு தகவல்களையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *