Share on Social Media

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர், குப்தா, சவிதா இருவருக்குமே இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் இருந்துள்ளன. குப்தாவுக்கு பாதிப்பு சரியாகிவிட, சவிதாவுக்கோ தீவிரமாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சையில் இருந்தபோது அவர் உயிர் பிரிந்திருக்கிறது.

குப்தாவின் இந்த நாளிதழ் பேட்டியின் போட்டோவைப் பதிவு செய்து, “ஆரோக்கியமான மற்றும் இளவயதினர், கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படுவதற்கும் உயிரிழப்பதற்குமான வாய்ப்புகள் குறைவு. ஆனால், தடுப்பூசியால் அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்” எனப் பதிவிட்டிருந்தார் பிரசாந்த் பூஷன். சமூக வலைதளங்களில் பலர், பூஷனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ட்விட்டரும் அதைத் `தவறாக வழிநடத்தக்கூடிய (misleading) பதிவு’ என்று குறிப்பிட்டது.

பிரசாந்த் பூஷன்

பிரசாந்த் பூஷன்

எந்த விமர்சனங்களுக்கும் பணியாத பிரசாந்த் பூஷன், “கோவிட் தடுப்பூசி பற்றிய என் கருத்துக்காக, சமூக வலைதளத்தில் பலராலும் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். இங்கே நான் பதிவிடும் இந்தப் பதிவு, தடுப்பூசி குறித்த என் சந்தேகங்களையும், அதற்கான காரணங்களையும் விளக்கும். முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத மற்றும் எதிர்விளைவுகளைக் கொண்டதாகத் தடுப்பூசி இருக்கும்போது, அது குறித்த எதிர் கருத்துகளை முடக்கும் செயல்பாடுகள் எனக்கு அதிர்ச்சி தருகின்றன” என்று கூறி, இரண்டு பக்கங்களைக் கொண்ட நீண்ட கட்டுரையை இணைத்திருந்தார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *