Share on Social Media

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மட்டுமல்லாது வீட்டிலும் அலுவலகங்களிலும்கூட முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention – CDC) கூறியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது டெல்டா வேரியன்ட் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 சதவிகித மக்கள் இந்த வகை உருமாறிய கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

US President Joe Biden

US President Joe Biden
AP Photo / Patrick Semansky

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நம் நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து இதனை பின்பற்றும் பட்சத்தில் 2020-ல் ஏற்பட்டவாறு நாட்டில் பொதுமுடக்கம், ஊரடங்கு , பள்ளி, கல்லூரி மூடுவது போன்றவை நடக்காமல் தடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், “ 63.4 சதவிகிதம் அமெரிக்க மாகாணங்களில் தொற்றின் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முகக்கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது” என அறிவுறுத்தியுள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *