Share on Social Media


வாலாஜாபாத்-கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து, ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி துறையினருக்கு, மருத்துவத் துறை வல்லுனர்கள், ‘கூகுள் மீட்’ வழியாக, நேற்று, ஆலோசனைகளை வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது அலை கொரோனா தொற்றால், பல பேர் இறந்துள்ளனர். இதை தடுக்க, சுகாதாரம், மருத்துவம், வருவாய், ஊரக வளர்ச்சி, காவல் உட்பட்ட பல துறைகள், பல நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.விழிப்புணர்வு வேண்டும்இதில், சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து, ஊராட்சிகள் தோறும், கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர். கிராமங்களில் இருக்கும் பல தரப்பு மக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில், பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது.இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து, மாநில ஊரக வளர்ச்சி துறையினர், ‘யுனிசெப்’ எனும், உலக சுகாதார நிறுவனம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறையினரின் ஆலோசனை கூட்டம், ‘கூகுள் மீட்’ எனும் செயலி வழியாக நேற்று நடந்தது.

இது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.டி.ஓ., ஒருவர் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை குறித்து, ஊரக வளர்ச்சி துறையினருக்கு, பல மருத்துவத் துறை வல்லுனர்கள் எடுத்துரைத்தனர். இதை, ஊராட்சிகளில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.

அறிவுரை

குறிப்பாக, சமூக விலகல், முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், கொரோனா தடுப்பூசிப்போடுதல் உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினர். இதை ஏற்று, ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் என, ஒன்பது மாவட்டங்களைச்சேர்ந்த பி.டி.ஓ.,க்கள் மற்றும், 2,901 ஊராட்சி செயலர்கள்பங்கேற்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *