Share on Social Media


திருவனந்தபுரம்: தடுப்பூசி கொள்முதல் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மாநில முதலமைச்சர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க கூட்டாக வலியுறுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். தடுப்பூசி கொள்முதல் செய்யும் பொறுப்பை மாநில அரசுகளின் மீதே மத்திய அரசு சுமத்துகிறது. அனைவருக்குமானது என்பதால் கொரோனா தடுப்பூசியை இலவசமாகவே மக்களுக்கு வழங்க வேண்டும்.

பணம் இல்லை என்பதற்காக ஒருவருக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை வந்துவிடக்கூடாது என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா 2வது அலையின் தாக்குதல் பெரும் அச்சத்தை மாநிலங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 3வது அலையின் தாக்குதல் கூட வரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிபுணர்கள் எச்சரிக்கை காரணமாக மிகுந்த கண்காணிப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தடுப்பூசி கொள்முதல் செய்யும் பொறுப்பை மாநிலங்கள் மீது சுமத்தினால் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

தட்டுப்பாட்டை பயன்படுத்தி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலேயே தடுப்பூசி உற்பத்தி திறன் உள்ளது. அறிவுசார் சொத்துரிமை விதிகளை தளர்த்தி தடுப்பூசியை பரவலாக உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பொறுப்பை மாநில அரசுகள் மீது போடுவது கூட்டுறவு கூட்டாட்சி அடிப்படைக்கே எதிரானது. ஆந்திரா, ஒடிசா, மராட்டியம் உள்பட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *