Share on Social Media

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகள் வெற்றிகரமாகக் களம் கண்டு சிறப்பான முறையில் தீவிர கோவிட் நோயையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுத்து வருகின்றன. ஆயினும் தடுப்பூசிகளால் அரிதினும் அரிதாக ஆங்காங்கே தீவிர பக்க விளைவு ஏற்படும் நிலையையும் நாம் அறிந்து வருகிறோம்.

தடுப்பூசிகளால் கிடைக்கும் நன்மை மிகப்பெரிய அளவிலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக அரிதாக இருப்பதாலும் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதில், குறிப்பாக அடினோ வைரஸ் வெக்ட்டார் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்துள்ள `வேக்செவ்ரியா’ (VAXZEVRIA) தடுப்பூசி, மற்றும் `கோவிஷீல்டு’ (COVISHIELD) தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள ஜான்சென் தடுப்பூசி ஆகியவற்றில் அரிதினும் அரிதாகத் தடுப்பூசி சார்ந்த தீவிர பக்கவிளைவான `ரத்தம் உறைதல் தன்மை’ ஏற்படுகிறது.

 vaccine

vaccine
AP Photo / Manish Swarup

இந்தியாவைப் பொறுத்தவரை, செலுத்தப்படும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களில் ஒருவருக்கும் குறைவான அளவிலேயே இந்தப் பக்கவிளைவு அரிதாகத் தோன்றுகிறது. இதைத் தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைதல் நிலை என்று கொள்ளலாம். தடுப்பூசி பெற்றவர்களிடைய, பெற்ற 4 – 20 நாள்களுக்குள் பின்வரும் அறிகுறிகளான…

1. அதீத தலைவலி.

2. நெஞ்சுப் பகுதியில் வலி.

3. மூச்சு விடுவதில் சிரமம்.

4. கெண்டைக்கால் தசைப்பகுதியில் அதீத வலி.

5. கண் பார்வை மங்கும் தன்மை.

6. அதீத வயிற்று வலி.

போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடிட வேண்டும்.

ஒருவேளை இது தடுப்பூசியால் ஏற்படும் அரிதான பக்கவிளைவாக இருப்பின் அதற்கு மருத்துவர் உரிய சிகிச்சையை உடனே வழங்கிடுவார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *