Share on Social Media

புதுடில்லி: தடகள ஜாம்பவான் மில்கா சிங் மறைவுக்கு பிரபலங்களின் இரங்கல் செய்தி:

மோடி, பிரதமர்: மகத்தான விளையாட்டு வீரரை இழந்து விட்டோம்.  எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் சிறப்பான இடத்தை பெற்றிருந்தார்.  இவரது மறைவு வேதனை அளிக்கிறது

 

ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி: மில்கா சிங்கின் போராட்ட குணம், சாதித்த கதை, வரும் தலைமுறைக்கு உத்வேகத்தை அளிக்கும். ஆழ்ந்த இரங்கல்.

 

கிரண் ரிஜ்ஜூ, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்: இந்தியா தன் நட்சத்திரத்தை இழந்து விட்டது. மில்கா சிங் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது ஊக்கசக்தி நாட்டுக்காக ஜொலிப்பதற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் உதவியாக இருக்கும்.

 

கவாஸ்கர், முன்னாள் கேப்டன்: இந்திய விளையாட்டின் மிக சோகமான நாள். எப்போதும் எனது செயல்பாட்டுக்கு ஊக்கம், ஆதரவு அளித்தவர். 91 வயதிலும் உடலை ‘பிட்’ஆக வைத்திருந்தார். நுாறு வயதை தாண்டுவார் என நினைத்தேன். இவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கபில் தேவ், முன்னாள் கேப்டன்: எங்களது காலத்தில் மில்கா சிங்கை விட, மிகப்பெரிய தடகள வீரர் கிடையாது.  தனித்தன்மை வாய்ந்தவர். எங்களுக்கு உத்வேகம் அளித்தார். அதிகளவில் பேசமாட்டார். 

 

அஞ்சு பாபி ஜார்ஜ், தடகள வீராங்கனை: தடகள விளையாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. ஓய்வெடுங்கள் மில்கா சிங்.

 

சச்சின், முன்னாள் கேப்டன்:  உங்களது மறைவு ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. வரும் பல தலைமுறைக்கு  துாண்டுகோலாக இருப்பீர்கள்.

 

காம்பிர், பா.ஜ., எம்.பி.,: பறக்கும் சீக்கியர் பறந்து சென்றிருக்கலாம். ஆனால் சாதனை வீரர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

 

கங்குலி, பி.சி.சி.ஐ., தலைவர்: மில்கா சிங் மறைவு செய்து வருத்தமளிக்கிறது. இந்தியாவின் பல இளைஞர்கள் தடகள வீரராக வருவதற்கான கனவை விதைத்தவர். நான் உங்களை நெருக்கமாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் பெற்றவன்.

 

கோஹ்லி, இந்திய அணி கேப்டன்: தேசம் முழுவதும் உயர்வு பெறுவதற்காக ஊக்கமளித்தவர். ஒருபோதும் தனது இலக்குகளையும், கனவையும் விட்டுக்கொடுக்காதவர். உங்களை எப்போதும் மறக்க இயலாது.

 

பி.டி.உஷா, முன்னாள் தடகள வீராங்கனை: எனது கடவுள் மில்கா சிங். அவரது உழைப்பு, அர்ப்பணிப்பு லட்சக்கணக்கானோரை ஈர்த்தது. இனிமேலும் ஈர்த்துக்கொண்டிருக்கும்.

 

நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் வீரர்: நாங்கள் மாணிக்கத்தை இழந்து விட்டோம். இவரது உத்வேகத்துக்காக ஒவ்வொரு இந்தியர் மனதில் எப்போதும் இருப்பார். ஆழ்ந்த இரங்கல்.

 

சுனில் செத்ரி, கால்பந்து வீரர்: நீங்கள் ஓடியதை நாங்கள் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் சிறு வயதில் ஒவ்வொருமுறையும் மில்கா சிங்கை போல வேகமாக ஓடுவோம். நீங்கள் வெறுமனே ஓட மட்டும் செய்யவில்லை. பலருக்கு உத்வேகமாக விளங்கினீர்கள். 

 

 

‘இருக்கை’ கவுரவம்

பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில் விளையாட்டு பல்கலை., உள்ளது. விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மில்கா சிங்கை கவுரவிக்கும் வகையில் இங்கு, இவருக்கு இருக்கை ஒன்று அமைக்கப்பட உள்ளது. 

 

கறுப்பு பட்டை

உலக டெஸ்ட் பைனலில் விளையாடி வரும் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள், மில்கா சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர்.

 

அரசு மரியாதையுடன் உடல் தகனம்

மறைந்த மில்கா சிங்கின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க பஞ்சாப்  அரசு மரியாதையுடன் சண்டிகரில் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன், கோல்ப் வீரர் ஜீவ் மில்கா சிங், இறுதிச் சடங்கை செய்தார்.  பஞ்சாப்  அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, விடுமுறை அளிக்கப்பட்டது. 

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *