Share on Social Media


கடலுார் : தடகள போட்டியில் சாதித்த கடலுார் தாஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்களை, அய்யப்பன் எம்.எல்.ஏ., பாராட்டினார்.

டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள போட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில், கடலுார் தாஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல தடகள போட்டியில் பங்கேற்றனர்.இதில், 10 மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, கடலுார் முதுநகர் காமாட்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்குபதக்கம் அணிவித்து பாராட்டினார்.தொழிலதிபர்கள் சித்ராலயா ரவி, ராஜசேகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், தி.மு.க., நிர்வாகி பிரகாஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *