Share on Social Media


இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “ஆரோக்கிய டென்சி சுமார் 5 மாதங்களாக ஜோஸ்பின்மேரி வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜோஸ்பின்மேரிக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆரோக்கிய டென்சியிடம் கழுத்து பகுதியை அமுக்க சொல்லியிருக்கிறார். இதனை பயன்படுத்தி கொண்ட அவர் ஜோஸ்பின்மேரி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்க செயினை கழற்றியிருக்கிறார்.

ஏன் செயினை கழட்டுறனு கேட்டு ஜோஸ்பின் மேரி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து கழுத்தை நெரித்து, வாயில் துணியினை வைத்து திணித்து கொலை செய்ததுடன் கழுத்தில் இருந்த செயின், வளையல்,ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டதுடன் ஜோஸ்பின் மேரி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தண்ணீர் டேங்கில் போட்டு விட்டு தன் கணவரை வர வைத்து அவருடன் டூவீலரில் தப்பி சென்று விட்டார்.

இதுல என்ன வேடிக்கைன்னா யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஜோஸ்பின்மேரி உடலைப் பார்த்து ஆரோக்கிய டென்சி கதறி அழுது நடித்துள்ளார். தனக்கு கடன் இருப்பதாகவும் அதற்காக செயினை எடுக்கும் போது கொலை செய்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆரோக்கிய டென்சி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் யோபேல் விக்டர் என்கிற யோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்துல் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *