Share on Social Media


பேராவூரணி அருகே பட்டா இல்லாததால் வீடு கட்ட முடியாமலும், அருகில் வசிப்பவர் பிரச்னை செய்து வந்ததாலும் தொடர் துயரங்களை சந்தித்து வந்த பெண் எனக்கு நியாயம் கிடக்கணும் என கூறி கதறியபடி கலெக்டருக்கு கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அடுத்த 24 மணி நேரத்தில் கலெக்டர் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று பட்டாவினை வழங்கியுள்ளார். ‘பல வருட பிரச்னையை ஒரு நாள்ல தீர்த்துட்டார் கலெக்டர்’ என அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நெகிழ்ந்துள்ளனர்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி பட்டத்தூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணியம்மை. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது கணவர் பாஸ்கரன் கொரோனா பரவல் மற்றும் பாஸ்போர்ட் கையில் இல்லாத காரணங்களால் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.மணியம்மை தனது 2 குழந்தைகளுடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார். குடிசை வீட்டின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளால் மழைக் காலங்களில் வீட்டுக்குள் மழை நீர் ஒழுகும் இதனால் பல வித இன்னல்களைத் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து மணியம்மை சந்தித்து வந்தார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *