Share on Social Media

பாட்யாலா: டோக்கியோ ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டிக்கு இந்தியாவின் தஜிந்தர் சிங் தகுதி பெற்றுள்ளளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில், இந்திய கிராண்ட் பிரிக்ஸ்–4 தடகள போட்டிகள் நடந்தது. இதில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் பால் சிங் டூர், அதிகபட்சமாக 21.49 மீ., துாரம் எறிந்தார். இதனையடுத்து ஒலிம்பிக் தகுதி இலக்கை (21.10 மீ.,) கடந்த இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார். தவிர இவர், தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், 2019ல் 20.92 மீ., துாரம் எறிந்திருந்தது இவரது தேசிய சாதனையாக இருந்தது.

டுட்டீ சந்த் ஏமாற்றம்: பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் டுட்டீ சந்த், இலக்கை 11.17 வினாடியில் கடந்தார். இதன்மூலம் ஒலிம்பிக் தகுதி இலக்கை (11.15 வினாடி) 0.02 வினாடியில் கோட்டைவிட்ட இவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இவர், தரவரிசை அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. தவிர டுட்டீ சந்த், தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், 11.21 வினாடியில் இலக்கை அடைந்தது இவரது சாதனையாக இருந்தது.

பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர், அதிகபட்சமாக 66.59 மீ., துாரம் எறிந்தார்.  ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இவரது சொந்த சாதனை 65.06 மீ., துாரமாக உள்ளது. இப்போட்டியில் இவர் மட்டுமே பங்கேற்றதால் இவரது செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *