Share on Social Media

தங்க நகைகள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வம் என்றைக்கும் குறைந்தது கிடையாது. அந்தஸ்தின் அடையாளமாக தங்கம் பார்க்கப்படுவதுதான் இதற்கு மிக முக்கிய காரணம். ஆனால், சமீப காலமாக, அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மீது மக்களின் கவனம் திரும்பக் காரணம், கொரோனா ஊரடங்கு நடைமுறைதான். தற்போது நிலவிவரும் கொரோனா காலகட்டத்தில் நகைக் கடைகள் இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம். தவிர, தங்கத்தைப் பத்திரங்களாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் எனப் பணம் வீணாவதில்லை என்பதை மக்கள் நன்கு புரிந்துவைத்திருக்கின்றனர். அதனால், வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Gold

Gold
Photo by vaibhav nagare on Unsplash

மேலும், தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக லாபமும் தங்கப் பத்திர முதலீட்டின் மூலம் கிடைக்கும். இதன் மூலம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும் என்பதாலும் மக்களின் ஆர்வம், பிசிக்கல் தங்கத்திலிருந்து தங்கப் பத்திர முதலீட்டின் மீது திரும்பியிருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *