Share on Social Media


இந்த நிலையில், நேற்று கொச்சிக்கு சென்றவர், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.“நான் அம்மாவுடன் சேர்ந்து விரைவில் மீடியாக்களை சந்திப்பேன். மனதளவில் நான் தயாராகி விட்டு உங்களிடம் பேசுவேன். நான் மீடியாக்களைக் கண்டு ஓடி ஒளியவில்லை. இந்த வழக்கு பற்றி இப்போது பேச விரும்பவில்லை. உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் கண்டிப்பாக நான் பதிலளிப்பேன். இப்போது கொச்சியில் நான் வழக்கறிஞரைச் சந்திக்க வந்திருக்கிறேன். வழக்கறிஞர் ஆலோசனைப்படி திருவனந்தபுரத்தில் அம்மாவுடன் சேர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவேன்” என்றார்.

ஸ்வப்னா சுரேஷ்

ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் வழக்கின் ஆரம்பக்கட்டத்தில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போதுதான் ஸ்வப்னாவின் குரலைக் கேரளம் கேட்டது. அதன்பிறகு இப்போதுதான் ‘கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன்’ என மீடியாக்களிடம் பேசியிருக்கிறார் ஸ்வப்னா. அவர் பேசப்போவது மத்திய அரசுக்கு எதிராகவா…மாநில அரசுக்கு எதிராகவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாகச் சிறையிலிருந்த ஸ்வப்னா, வழக்கறிஞர் மூலம் ஒரு தகவல் வெளியிட்டிருந்தார். அதில் மத்திய அரசு ஏஜென்சிகள் இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறும்படி வற்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். எனவே அவர் மத்திய அரசு ஏஜென்சிகள் மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *