Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டை பைனலில் இன்று இந்தியாவின் மேரி கோம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இன்று பெண்களுக்கான பைனல் நடக்கிறது. இதன் 51 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம், இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பே மோதுகின்றனர். இதில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் அசத்தும் பட்சத்தில், ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் தனது 6வது தங்கத்தை தட்டிச் செல்லலாம். இவர், இத்தொடரில் இதுவரை 5 தங்கம் (2003, 2005, 2010, 2012, 2017), ஒரு வெள்ளி (2008) என, 6 பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் பூஜா ராணி, 75 கி.கி., எடைப்பிரிவு பைனலில் உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவை எதிர்கொள்கிறார். இதில் ‘நடப்பு சாம்பியன்’ பூஜா ராணி சிறப்பாக விளையாடினால், ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் தனது 4வது பதக்கத்தை அள்ளலாம். இவர், இதுவரை ஒரு தங்கம் (2019), ஒரு வெள்ளி (2012), ஒரு வெண்கலம் (2015) என, 3 பதக்கம் வென்றுள்ளார்.

மற்ற எடைப்பிரிவு பைனலில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளான அனுபமா (+81 கி.கி.,), லால்பூட்சைஹி (64 கி.கி.,) தங்கம் வெல்ல முயற்சிக்கலாம்.

நாளை நடக்கவுள்ள ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் அமித் பங்கல் (52 கி.கி.,), ஷிவா தபா (64 கி.கி.,), சஞ்ஜீத் (91 கி.கி.,) விளையாடுகின்றனர்.

இம்முறை இந்தியாவுக்கு 15 பதக்கம் உறுதியானது. இதில் 8 பேர் வெண்கலம் கைப்பற்றினர். இதற்கு முன், 2019ல் இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என, 13 பதக்கம் கிடைத்திருந்தது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *