Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு பைனலில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம்,  இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பே மோதினர். இதில் மேரி கோம் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, இத்தொடரில் இவரது 2வது வெள்ளி பதக்கம். ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் இவர், இதுவரை 5 தங்கம் (2003, 2005, 2010, 2012, 2017), 2 வெள்ளி (2008, 2021) என, 7 பதக்கம் வென்றுள்ளார்.

பூஜா தங்கம்: பெண்களுக்கான 75 கி.கி., எடைப்பிரிவு பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் பூஜா ராணி 5–0 என, உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவை வீழ்த்தி மீண்டும் தங்கம் வென்றார். இத்தொடரில் இதுவரை 2 தங்கம் (2019, 2021), ஒரு வெள்ளி (2012), ஒரு வெண்கலம் (2015) என, 4 பதக்கம் வென்றுள்ளார்.

அனுபமா வெள்ளி: பெண்கள் 64 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் லால்பூட்சைஹி 2–3 என, கஜகஸ்தானின் மிலானா சாப்ரோனாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். பெண்களுக்கான +81 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அனுபமா 2–3 என, கஜகஸ்தானின் லாசாத் குங்கீபாயேவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

இன்று நடக்கவுள்ள ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் அமித் பங்கல் (52 கி.கி.,), ஷிவா தபா (64 கி.கி.,), சஞ்ஜீத் (91 கி.கி.,) விளையாடுகின்றனர்.

இம்முறை இந்தியாவுக்கு 15 பதக்கம் உறுதியானது. இதற்கு முன், 2019ல் இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என, 13 பதக்கம் கிடைத்திருந்தது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *