Share on Social Media

சென்னை: தங்கம் விலை 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ₹544 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 8ம் தேதி தங்கம் ஒரு சவரன் ₹36,400, 9ம் தேதி ₹36,120, 10ம் தேதி ₹36,200க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட் விடுமுறை. இதனால் முந்தைய நாள் விலையிலயே தங்கம் விற்பனையானது. 12ம் தேதி ஒரு சவரன் ₹36,056க்கும் விற்கப்பட்டது. 13ம் தேதி சவரனுக்கு ₹88 அதிகரித்து ஒரு சவரன் ₹36,144க்கு விற்கப்பட்டது. 2ம் நாளாக நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ₹19 அதிகரித்து ஒரு கிராம் ₹4,537க்கும், சவரனுக்கு ₹152 அதிகரித்து ஒரு சவரன் ₹36,296க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலையில் 3வது நாளாகவும் தங்கம் விலை உயர்ந்தது. 

காலையில் கிராமுக்கு ₹20 அதிகரித்து ஒரு கிராம் ₹4,557க்கும், சவரனுக்கு ₹160 அதிகரித்து ஒரு சவரன் ₹36,456க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ₹38 அதிகரித்து ஒரு கிராம் ₹4,575க்கும், சவரனுக்கு ₹304 அதிகரித்து ஒரு சவரன் ₹36,600க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ₹544 அளவுக்கு அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *