Share on Social Media

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் விலை உயர்ந்தால், அதே வேகத்தில் குறைந்தும் வருகிறது. இதனால், இந்த நேரத்தில் நகை வாங்கலாமா என்ற ஒரு குழப்பமான நிலையில் நகை வாங்குவோர் இருந்து வருகின்றனர். கடந்த 8ம் தேதி சவரன் ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,400க்கும் விற்கப்பட்டது. 9ம் தேதி ஏறிய வேகத்தில் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,520க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.36,160க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது.

கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,515க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.36,120க்கும் விற்கப்பட்டது. 10ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,525க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,200க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்கப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று மீண்டும் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,507க்கும், சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்கப்பட்டது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *