Share on Social Media


‘அண்ணாத்த’ ரிசல்ட் என்ன என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னுடைய அடுத்த படத்துக்கு ஆயத்தமாகி விட்டார் கீர்த்தி சுரேஷ்.

‘வாஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மலையாளப் படத்தின் பூஜை வரும் 17-ம் தேதி நடக்கிறது. சொந்த தயாரிப்பில் முதல்முறையாக ஹீரோயினாக நடிக்கிறார் கீர்த்தி. கீர்த்தியின் அக்கா ரேவதி இந்தப் படத்திலிருந்து தயாரிப்புப் பொறுப்பை ஏற்கிறார்.

” ‘ரேவதி கலாமந்திர்’ங்கிறதுதான் எங்க கம்பெனி பேரு தயாரிப்பாளரா எங்களுக்கு ‘வாஷி’ 34 வது படம். குழந்தை நட்சத்திரமா எங்க தயாரிப்புல வந்த மூணு படங்கள்ல கீர்த்தி நடிச்சிருந்தாலும் ஹீரோயினா இதுதான் முதல் படம். அனுபவம் கிடைக்கட்டுமேன்னு பெரிய பொண்ணு ரேவதிகிட்டத் தயாரிப்புப் பொறுப்பைத் தந்திருக்கோம். ஹீரோ டொவினோ தாமஸ். மலையாள இண்டஸ்ட்ரியின் பிரபல ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணுதான் இயக்குநர். அவருக்கும் இது முதல் படம்” என மகளின் அடுத்த படம் குறித்த அறிமுகத்தை நமக்கு தந்த கீர்த்தி சுரேஷ்யின் அம்மா மேனகாவிடம், ‘அண்ணாத்த’ படத்துக்கு வந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டேன்.

‘எனக்குப் பிடிச்சிருக்குங்க படம். சரியா 40 வருஷத்துக்கு முன்னாடி அவருடன் ‘நெற்றிக்கண்’ படத்துல ஜோடியா நான் நடிச்சேன். அன்னைக்கு ஷூட்டிங்ல எப்படி இருந்தாரோ அதேபோலத்தான்… இல்ல இல்ல, அதை விடவும் அழகாவும் ஆக்டிவாகவும்தான் இன்னைக்கும் இருக்கிறார். அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு ஸ்டைலா தெரியுறார் மனுஷன். ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும்’னு ஒரு டயலாக் இருக்குமே, அது நிஜம்தான். அத்தனை துணை நடிகர்கள் கூட்டத்துல 70 வயசைக் கடந்த நிலையிலும் எனர்ஜெட்டிக்கா அவர்தான் தெரியுறார். அவர் நடிச்சதையும், அதை இயக்குநர் உள்ளிட்ட யூனிட் அழகா திரையில கொண்டு வந்திருக்கிறதையும் பாராட்டற மனசு இங்க யாருக்குமில்லை. ட்ராமா மாதிரி இருக்குனு சொல்றாங்க, செண்டிமெண்ட்னு வந்துட்டா கொஞ்சம் ட்ராமா மாதிரிதான் இருக்கும்.

‘அண்ணாத்த’ கீர்த்தி சுரேஷ்!

என்னைக் கேட்டா, விமர்சனம் பார்த்துட்டுதான் சினிமா போய்ப் பார்க்கணும்னு நினைக்கிறதே தப்பு. ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடிச்சிருக்கிற ஒரு படத்தை நாலு இளைஞர்கள் நல்லா இல்லைனுன்னுதான் சொல்வாங்க. அதேபோல டீன் ஏஜ் பசங்களுக்குப் பிடிச்ச ஒரு படம் நடுத்த்ர வயதுக்காரங்களுக்குப் பிடிக்கும்னு சொல்ல முடியாது. அதனால விமர்சனம் பண்றவங்க வயசு, ரசனைனு நிறைய விஷயங்கள் அவங்க சொல்ற கருத்துக்கு பின்னாடி இருக்கு. அதனாலதான் விமர்சனம் பார்த்துட்டுப் படம் பார்க்கப் போகாதீங்கனு சொல்றேன்.

அதேபோல ‘ரஜினி பொண்ணு வயசு இருந்துகிட்டு தங்கச்சியா நடிக்கலாமானு சிலர் கேட்டாங்க. சினிமா நிழல்தானேங்க? நிஜத்துல ஒரு வயதான ஒருத்தர் குறைந்த வயது மகளைக் கல்யாணம் செஞ்சா அதைக் குறை சொல்லலாம். இது நடிப்புதானே? இதுல ஏன் வயது அது இதுனு தேவையில்லாத விஷயங்களைப் போட்டு குழப்பிக்கணும்? எழுபது வயதுக்காரர்தான். ஆனா பிராக்டிகல் வாழ்க்கையில முடியைக் கருப்பா காட்டிகிட்டோ, விக் வச்சிகிட்டோ வெளியில வராம, தன்னை அப்படியே பொதுவெளியில வெளிப்படுத்திக்கிடற அவர், தன்னுடைய தொழிலான சினிமாக்கு வந்ததும் கேரக்டருக்கு ஏத்தபடி மாறுறார் அவருக்கு செட் ஆகறதாலதானே அவர் பண்றார். அவர் மனசுக்கு ஹீரோவா தெரியறவரை அவர் நடிச்சுட்டுப் போகட்டுமே? இதுல யாருக்கு என்ன பிரச்னை? தங்கச்சி என்னங்க, இன்னொரு படத்துல ஜோடியா நடிக்கக் கேட்டாலும் கீர்த்தி நடிப்பா’’ என்கிறார்.

vikatan 2019 07 2798f36d 60d1 4db7 9282 26d47149c85c p94a Tamil News Spot
மேனகா சுரேஷ்

பூஜை முடிந்த மறு வாரமே ’வாஷி’ படப்பிடிப்பு திருவனந்தபுரம் சுற்று வட்டார்த்தில் தொடங்க இருக்கிறதாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *