Share on Social Media


நாம் கடிதம் அனுப்பி முப்பது நாள்களுக்குள் தகவல் அனுப்பப்படும். ஒருவேளை அப்படி முப்பது நாள்களுக்குள் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால், முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படியும் பதில் கிடைக்காத பட்சத்தில், சென்னையிலுள்ள மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையத்திலும், டெல்லியிலுள்ள மத்திய ஆணையத்திலும் மேல் முறையீடு செய்யலாம். ஆணையத்தில் தங்களின் விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்துவார்கள். சில சமயங்களில் நம்முடைய கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளப. அதற்கான காரணங்களையும் ஆணையம் நமக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 8-ன் கீழ் எப்படியான தகவல்கள் எல்லாம் அளிக்கப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
For Representation

அதன்படி, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும்படியான தகவல்கள், இந்தியாவின் படைத்திறன், விஞ்ஞான மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கும்படியாக அமையும் தகவல்கள், அயல்நாடுகளுடனான உறவைப் பாதிக்கும் வகையிலான தகவல்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையிலான தகவல்கள், பொதுமக்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கும் தகவல்கள், வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து ரகசியமாகப் பெறப்படும் தகவல்கள், ஒருவரின் உயிருக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய அல்லது ஒருவரின் ரகசியங்களை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய தகவல்கள் மற்றும் புலனாய்வு செய்முறை அல்லது குற்றவாளியைக் கைது செய்தலுக்குத் தடை செய்யும் வகையில் இருக்கும் தகவல்கள் போன்றவற்றைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற முடியாது.

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை நாம் சந்தேகங்களை கேட்டு தகவல் பெறலாம். ஒருவர் இந்தியாவின் எந்த மாநில மொழியிலும் தகவல் பெறுவதற்கான விண்ணப்பதை அனுப்ப முடியும். தற்போது இணைய வழியிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்ப முடிவதால் இன்னும் எளிதாக நம்மால் தகவல்களை கேட்டுப் பெற முடிகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *