“வலியின் காரணமாக அவர் என் கைகளை அழுத்திப் பிடிக்க ஆரம்பித்தார். மூச்சு விடுவதில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கூறினேன். அப்போது பதற்றம் அதிகரிக்க, எனது அட்ரினலின் அதிகமாகிக் கொண்டே இருந்தது” என்கிறார் கணவர் கீட்டிங் .
மனைவி யிரான் செர்ரி, “மருத்துவமனைக்குச் செல்வதற்கு 20 நிமிடங்கள் இருந்த நிலையில், நான் காரில் நேரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தையை வெளித்தள்ள வேண்டுமா, அல்லது மருத்துவமனை வரை வெளித்தள்ளாமல் அடக்கிக்கொள்ள வேண்டுமா என்ற குழப்பத்திலும் அவஸ்தையிலும் இருந்தேன்.

இறுதியாக `புஷ்’ செய்தேன். மருத்துவமனை செல்லும் வழியிலேயே, கார் முன் சீட்டிலேயே எனக்குப் பிரசவம் நிகழ, பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை சென்ற பின்னர் செவிலியர்கள் வந்து என் குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டினார்” என்று கூறியிருக்கிறார்.
டெஸ்லா காரில் பிறந்த குழந்தை என்பதால், மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் குழந்தையை டெஸ்லா பேபி என்று அழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர் தம்பதி.