Share on Social Media


* இந்தியாவில் பயண வரலாறே இல்லாத பெங்களூரு டாக்டர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. அவர் எந்த அறிகுறியும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

* ”விமான நிலையங்களைக் கண்காணிக்கிறோம். ஆனால், ஏற்கெனவே நம் சமூகத்தில் ஒமிக்ரான் தொற்று இருப்பதையே இது உணர்த்துகிறது” என்கிறார், செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா.

* ”இந்தியாவின் பெரு நகரங்களில் முறையாக சோதனை செய்தால், இன்னும் பல ஒமிக்ரான் நோயாளிகளைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இது ஆபத்தில்லாத உருமாற்றமே” என்கிறார் ராகேஷ் மிஸ்ரா.

* ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸுடன் கொரோனா வைரஸ் உறவாடியே இந்தப் புதிய ஒமிக்ரான் உருமாற்றத்தை அடைந்திருக்கிறது என்கிறார்கள் அமெரிக்க உயிரியல் நிபுணர்கள்.

* ‘இதுவரை உலகெங்கும் நிகழ்ந்த உருமாற்றங்களில் ஒமிக்ரான் தான் மிக வேகமாகப் பரவும் வகை. குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கிறது தென் ஆப்ரிக்கா.

மும்பை விமானநிலையம்

மும்பை விமானநிலையம்

* தென் ஆப்ரிக்க டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி. இவர்தான் ஒமிக்ரான் தொற்றுள்ள நோயாளியை முதன்முதலில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தவர். 30 வயது இளைஞர் ஒருவரே அந்த முதல் நோயாளி.

* ”பார்ப்பதற்கு அவர் ஆரோக்கியமாகவே தெரிந்தார். களைப்பு, உடல்வலி, தலைவலி, தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே இருந்தன. இருமலோ, சுவை மற்றும் வாசனை இழப்போ இல்லை” என்கிறார் அவர்.

* அந்த இளைஞரின் குடும்பத்தில் எல்லோருக்குமே ஒமிக்ரான் தொற்று இருந்தது. இதேபோன்ற அறிகுறிகள்தான். எனினும், ‘எல்லோருக்குமே ஒமிக்ரான் தொற்று இப்படித்தான் இருக்கும் என சொல்லமுடியாது’ என்கிறார் டாக்டர் கோட்ஸி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *