Tamil News large 264481320201102070729 Tamil News Spot
Share on Social Media

மதுரை : மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிக்கு 560 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 20 ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகரில் நவ., முதல் பிப்., வரை டெங்கு தாக்கம் தீவிரமாக இருக்கும். தினமும் 20 பேர் வரை பாதிக்கப்படுவர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மதுரை மீளாத நிலையில் டெங்கு சீசன் துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள 560 கொசு ஒழிப்பு ஊழியர்களை டெங்கு தடுப்பிலும் மாநகராட்சி களமிறக்கியுள்ளது.

ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக காய்ச்சல் பாதிப்பை கணக்கிடுவது, அபேட் மருந்து ஊற்றுவது, கொசுப் புழுக்களை கண்டறிந்து அழிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த ஊழியர்கள் மேற்கொள்கின்றனர். புகை மருந்து அடிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதியாக பணி செய்கின்றனர்.

கடைசி 3 மாதங்களில் 5 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் எண்ணிக்கை உயரலாம். பழங்காநத்தம், திருநகர், செல்லுார், அனுப்பானடி உள்ளிட்ட 20 ஹாட் ஸ்பாட் பகுதிகளில் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்துகிறது.

நகர்நல அலுவலர் குமரகுருபரன் கூறியதாவது: நகரில் தினமும் கொரோனா பாதிப்பு 30க்கும் குறைவாக உள்ளது. டெங்கு பாதிப்பும் பெரிதாக இல்லை. ஆக.,ல் 2, செப்.,ல் 1, அக்.,ல் 2 என 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வீடுகள், சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காத படி மக்கள் கவனிக்க வேண்டும். தண்ணீர் பாத்திரங்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும், என்றார்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *