Share on Social Media

டூட்டி சந்த், தடகள உலகில் இந்த பெயர் எதிர்கொண்டிருக்கும் சர்ச்சைகள் ஏராளம். இவர் ஒரு ட்ராக்கில் புயலாக சீறி பாய்ந்தால், பக்கத்து ட்ராக்கில் சர்ச்சைகள் சூறாவளியாக சுழன்றடித்து இவரை ஓவர்டேக் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும்.

பேசுவதற்கு விஷயமே இல்லையென்றாலுமே கூட பாரம்பரியம், பண்பாடு என எதையாவது சொல்லி பெண்களை பின்னோக்கி இழுக்கவே இந்த சமூகம் எப்போதும் முயன்று கொண்டிருக்கும். பேசுவதற்கும் வசைபாடுவதற்கும் அத்தனை விஷயங்கள் உடைய டூட்டி சந்திடம் அமைதியாகவா இருப்பார்கள்?

தடதடக்கும் டூட்டி சந்தின் கால்களை படபடக்க வைக்கும் வகையில் விமர்சனங்களை அள்ளிவீசினர். ஆனாலும், டூட்டி சந்த் அசரவில்லை. ‘ஃபாரஸ்ட் கம்ப்’ மாதிரி எதைப்பற்றியும் கவலைப்படாமல், ரன் டூட்டி ரன் என ஓடிக்கொண்டே இருந்தார், இந்தியாவின் சாதனை பெண்ணாக உயரும் வரை!

25 வயதாகும் டூட்டி சந்த் ஒடிஷாவின் ஜெய்ப்பூர் அருகே ஒரு கிராமத்தில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். உடன்பிறந்தவர்கள் மட்டும் 7 பேர். ஏழ்மை குடும்பத்தை வாட்டியது. உடல்திறன் மட்டுமே அவர்களுக்கென்று இருந்த ஒரே சொத்து. டூட்டியின் மூத்த சகோதரியான சரஸ்வதி சந்த் தடகளத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தடகளத்தில் மாநில அளவிலான போட்டிகள் வரை உயர்ந்தார். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அவருக்கு ஒரு அரசு வேலை கிடைத்தது. டூட்டிக்கு இந்த சம்பவமும் சகோதரியின் தடகள பயணமுமே இன்ஸ்பிரேஷன். அக்காவை மாதிரி ஓடி ஓடியே ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்பதே இவரின் அதிகபட்ச இலக்காக இருந்தது. ஆனால், டூட்டியின் கால்கள் ஓடிய ஓட்டம் இதையெல்லாம் தாண்டிய உயரத்துக்கு அவரை அழைத்து சென்றது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *