Share on Social Media

புதுடில்லி: உலக தடகள 4*100 மீ., தொடர் ஓட்டத்திற்கான இந்திய அணிக்கு டுட்டீ சந்த், ஹிமா தாஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போலந்தில், வரும் மே 1–2ல் உலக தடகள தொடர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச் சுற்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் இப்போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டன. பெண்களுக்கான 4*100 மீ., தொடர் ஓட்டத்திற்கு டுட்டீ சந்த், ஹிமா தாஸ், தனலட்சுமி, அர்ச்சனா, ஹிமாஸ்ரீ, தனேஷ்வரி தேர்வாகினர்.

பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்க பூவம்மா, சுபா, கிரண், அஞ்சலி தேவி, ரேவதி, விஸ்மாயா, ஜிஸ்னா மாத்யூ தேர்வு செய்யப்பட்டனர். ஆண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்திற்கு தருண் அய்யாசாமி, ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி, முகமது அனாஸ் யாஹியா, சர்தாக் பாம்ப்ரி, நிர்மல், அமோஜ் ஜேக்கப் தேர்வாகினர்.

கடந்த 2019ல் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் கலப்பு 4*400 மீ., ஓட்டத்தில் பைனல் வரை சென்ற இந்திய அணி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *