Share on Social Media


புதுடில்லி: இந்த மாத இறுதியில் டில்லி செல்ல திட்டமிட்டுள்ள மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பின் மம்தா பானர்ஜியின் முதல் டில்லி பயணம் இதுவாகும். காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இன்னும் சில எதிர்க்கட்சித் தலைவர்களை மம்தா சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மம்தா கூறுகையில், “தேர்தலுக்குப் பிறகு நான் டில்லிக்குச் செல்லவில்லை. இப்போது கோவிட் நிலைமை நன்றாக உள்ளது. பார்லிமென்ட் மழைகால கூட்டத் தொடர் நடப்பதால் நான் டில்லிக்குச் செல்வேன். நண்பர்களைச் சந்திப்பேன். எனக்கு நேரம் வழங்கப்பட்டால், பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்கலாம். டில்லி செல்லும் தேதிகள் நிர்ணயிக்கப்படவில்லை,” என தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *