Share on Social Media


புதுடில்லி: தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அழைப்பு விடுத்ததையடுத்து இன்று பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லியில் ஆலோசனை நடத்தினர். வரப்போகும் 2024 பார்லி. லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து நீக்க, மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் சரத்பவார் இறங்கியுள்ளார்.

இதற்காக தேர்தல் பிரசார வியூக மன்னன் பிரசாந்த் கிஷோரின் உதவியுடன், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையாக பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு சரத்பவார் அழைப்பு விடுத்தார்..
இதையடுத்து டில்லியில் சரத் பவார் இல்லத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி ,தேசிய மாநாட்டு கட்சியின், ஒமர் அப்துல்லா, பா.ஜ.,விலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மியின், சஞ்சன் சிங், இந்திய கம்யூ,.டி. ராஜா, பா.ஜ.விலிருந்து விலகிய சுதீந்திர குல்கர்னி, சமாஜ்வாதி கட்சியின் கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் 2024 பார்லி. லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *