Share on Social Media


தமிழகத்தில் மூடப்பட்ட கோயில்களைத் திறக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்புபடுத்தி மின்வாரிய ஊழல் விவகாரத்தைக் கிளப்பினார். அடுத்து, அமைச்சர் ராஜகண்ணப்பனின் போக்குவரத்துத்துறையில் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக அறிவித்தார். இப்படி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிவித்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்.

தமிழக பி.ஜே.பி-யின் முதல் அரசியல் எதிரி – இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. கோயில்களை அரசு நிர்வாகப்பிடியில் இருந்து விலக்க வேண்டும் என்பது பி.ஜே.பி-யின் கோஷம். இதை தி.மு.க ஏற்கவில்லை. தமிழக முதல்வருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, கோயில்கள் அரசு நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்கிற நோக்கில் தினப் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதினார். இது தமிழக பி.ஜே.பி-யினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்த சில நாள்களில், இந்து அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று கவர்னர் ரவி விசாரித்தார். அந்தத் துறையின் செயலாளர் சந்திரமோகன், இந்துஅறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆகியோரை ராஜ்பவனுக்கு அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார் கவர்னர் ரவி. ஆக, அமைச்சர் சேகர் பாபுவுக்கு மறைமுகமாகத் தரப்பட்ட அழுத்தம் என்றே தி.மு.க அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.

தமிழக அரசியல் விவகாரங்களை உற்று கவனிக்கும் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, “தமிழகத்தில் பி.ஜே.பி-யை பிரதான எதிர்க்கட்சியாக சித்திரிக்க வேகமாகக் காய்நகர்த்தல் நடக்கிறது. இந்த அசைன்மென்ட்டை மூன்று ஐ.பி.எஸ் வசம் ஒப்படைத்தார்கள். ஒருவர் கவர்னர் ரவி. இரண்டாவது தமிழக பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை. இந்த இருவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள். மூன்றாவது ஐ.பி.எஸ் அதிகாரி மத்திய உளவுத்துறையில் உள்ள முக்கியப் பிரமுகர். இந்த மூவரும்தான் முக்கோண பாலிடிக்ஸ் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

தமிழக கவர்னராக ரவியை நியமித்ததற்கான காரணம், தமிழகத்தில் புதிய கோணத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். இது பிரதமர் மோடியின் திட்டம். மத்திய உளவுத்துறையின் முக்கியப் பதவிகளில் இருந்த அனுபவம் உளளவர் ரவி. அதேபோல், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தமிழகத்திலுள்ள இளம் ஐ.பி.எஸ்-களுடன் நல்ல தொடர்பு உண்டு. தகவல் பரிமாற்றமும் உண்டு. ஆட்சியாளர்களின் ஒவ்வோர் அசைவையும் தனது சோர்ஸ்கள் மூலம் அண்ணாமலையால் தெரிந்துகொள்ள முடியும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *