ஹாக்கினி முத்திரையால் ஞாபக சக்தி அதிகரிக்கும். நேர்முக எண்ணங்கள் அதிகமாகும். இரத்த அழுத்தம் வராமல் வாழலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை:
விரிப்பில் நிமிர்ந்து சுகாசனம் – பத்மாசனம் – வஜ்ராசனம் எதாவது ஒரு ஆசனத்தில் அமரவும். முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் 2 0 வினாடிகள் கவனம் செலுத்தவும்.
பின் கண்களை திறக்கவும். கைவிரல்கள் ஒவ்வொரு நுனியையும் படத்தில் உள்ளது போல் தொடவும். எல்லா விரல் நுனிகளும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு நிமிடங்கள் செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
பயன்கள் : உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பிராண சக்தி நன்றாக கிடைக்கும். உடல், மன சோர்வை நீக்கி புத்துணர்வு தருகின்றது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். ஹாக்கினி முத்திரையால் ஞாபக சக்தி அதிகரிக்கும். நேர்முக எண்ணங்கள் அதிகமாகும். இரத்த அழுத்தம் வராமல் வாழலாம்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
https://www.youtube.com/watch?v=videoseries