Share on Social Media


“நடிகர் ஜெய்சங்கர் நல்லா இங்கிலீஷ் பேசுவார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘ராமண்ணா’ங்கிற டைரக்டர் இயக்கின ‘நீ’ படத்துல அவருடன் நடிச்சப்ப அவருடைய இங்கிலீஷ் பேச்சுக்காகவே ஷுட்டிங் ஸ்பாட்டில் கலகலன்னு அவருடன் பேசிட்டிருப்பார். பொதுவா ஷுட்டிங் ஸ்பாட் பிரேக்ல புத்தகங்களை எடுத்துட்டு வாசிக்க உட்கார்ந்திடுற ஜெயலலிதா ஜெய்சங்கர்கூட மட்டும் பேசினது அந்த நாட்கள்ல கிசுகிசுவா பத்திரிக்கைகள்ல வந்துச்சு

இந்த தகவல் எப்படியோ எம்.ஜி.ஆர். காதுக்குப் பேய்விட , ஒரு நாள் எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் ஜெயலலிதாக்கா வீட்டுல இருக்கிறார்னு நினைச்சுட்டு துப்பாக்கி எடுத்துட்டு ஜெயலலிதாக்கா வீட்டுக்கே போயிட்டார். ஒருவேளை அன்னைக்கு ஜெய்சங்கர் அங்க இருந்திருந்தா எம்.ஜி.ஆர். அவரைச் சுட்டாலும் சுட்டிருப்பார்”

– இப்படிப் பேசி தன்னுடைய யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நடிகை குட்டி பதிமினிக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா - ஜெய்சங்கர்

ஜெயலலிதா – ஜெய்சங்கர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த முதல் நாடகமான ‘முரசே முழங்கு’ நாடகத்தைத் தலைமையேற்று தொடங்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் குட்டி பத்மினியும் நடித்திருந்தார். அந்த நாடகத்தில் நடித்த ‘ஓமப்பொடி’ பிரசாத் என்கிற நடிகர் இதுதொடர்பாக குட்டி பத்மினியைத் தொடர்பு கொண்டு கடுமையாகப் பேசியிருக்கிறார்.

”எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பத்தி நீங்க எப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசலாம்? அவங்க அப்படிப் போனதை நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா? இப்படிப் பேசறது தப்பில்லையா? கேட்டா எனக்குத் தெரிஞ்சதைப் பேசினேன்னு சொல்றீங்க‌, உங்களைப் பத்திக்கூடத்தான் எனக்குத் தெரியும். நானும் பேசி வீடியோ போடட்டுமா” என ஆவேசமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக குட்டி பத்மினியிடமே பேசினேன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *