Share on Social Media

சேஸிங்கில், அவர், தன்னிகரற்றவராக திகழ்ந்தார். கிட்டத்தட்ட, அவரது 74 சதவிகிதம் அரைசதங்களும், 84 சதவிகிதத்துக்கும் அதிகமான சதங்களும், சேஸிங்கின்போது வந்தவைதான். அதிலும் அணி சேஸ் செய்து வென்ற போட்டிகளில், ஜெயவர்த்தனேயின் சராசரி, 53-க்கும் மேல்.

சேஸிங் ஸ்பெஷலிஸ்ட்தான் எனினும், முதலில் பேட்டிங் செய்யும் சந்தர்ப்பங்களிலும், நம்பத்தகுந்தவராகவே, ஜெயவர்த்தனே இருந்தார். அணிக்கு என்ன தேவையோ, அதற்கேற்றாற் போல் தன்னை வளைத்து உருவாக்கிக் கொண்டு எல்லாக் காலத்திற்கும் உரியவரான ஜெயவர்த்தனே, எல்லா ஃபார்மட்டுக்கும் தகுந்தவராக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். டெஸ்டில்தான், ஒரு முச்சதம் உள்ளிட்ட ஏழு இரட்டைச்சதங்களுக்கு மேல் குவித்தார் என்று பார்த்தால், அதற்கு நேர்எதிர் ஃபார்மட்டான டி20-யிலும், 64 பந்துகளில், சதமடித்துச் சிரிப்பார். இவையெல்லாம்தான் அவரது மிகப்பெரிய பலங்கள்.

ஜெயவர்த்தனே, சங்ககரா

ஜெயவர்த்தனே, சங்ககரா

2006-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சங்ககாராவுடன் இணைந்து, 624 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்த ஜெயவர்த்தனே, 572 பந்துகளில், 374 ரன்களைக் குவித்து சாதனை நிகழ்த்தி, தனது திறனை நிரூபித்தார். அதே ஆண்டு, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் போதும், ஒருநாள் தொடரில், 109 ஆவரேஜோடு 328 ரன்களையும், டெஸ்ட் தொடரில் 230 ரன்களையும் குவித்துக் காட்டி, ‘ஃபிளாட் டிராக் புல்லி’ என்ற விமர்சனத்துக்கும், துணைக்கண்டங்களில் மட்டும்தான் இவர் சாதிப்பார் என்னும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அமைதியே உருவான அவரால், அழுத்தங்களைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்புபவர்களுக்கு, இறுதிப்போட்டிகளில், தன்னுடைய இன்னொரு அவதாரத்தைக் காட்டுவார் ஜெயவர்த்தனே. அவருடைய ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளின் சராசரி 33 என்றால், அவர் விளையாடிய ஒருநாள் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் மட்டும், அவரது சராசரி, 38 ஆக இருந்திருக்கிறது. இதற்கும் ஒருபடி மேலே போய், ஐசிசி நடத்தும், மிக முக்கிய தொடர்களில் எல்லாம், ஜெயவர்த்தனேயின் ஆட்டத்திறன் பன்மடங்கு பல்கிப்பெருகும். இரண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள், மூன்று டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயவர்த்தனே, அத்தனை தொடர்களிலும் மிக முக்கியப் பங்காற்றினார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *