Share on Social Media


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டுமென அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், `ஆணையத்தில் வேறு சில நீதிபதிகளை நியமித்தால், அதன் செயல்பாடுகள் பாதிக்கும்’ என்றும் கூறியிருக்கிறது. இந்தச் சூழலில், `ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் செல்கிறதா?’ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

 ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி

“ஆணையத்தின் விசாரணை சரியான திசையில்தான் பயணிக்கிறது. ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், தமிழக அரசு எந்த நகர்வையும் செய்யவில்லை. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்’ என்று ஸ்டாலின் பேசினார். அதன்படிதான், தற்போது தமிழக அரசு செயல்படுகிறது. எந்தவகையிலும், ஆணையத்தின் விசாரணைக்கு குறுக்கீடு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *