Share on Social Media


சாத்தான்குளம்: ஐ.நா.வை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சாத்தான்குளத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி கொரோனா ஊரடங்கை மீறி கடை திறந்ததாக, சாத்தான்குளம் போலீசாரால் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரவு முழுவதும் தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் 2 பேரும் 22ம் தேதி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம், ஐ.நா. சபை வரை எதிரொலித்தது. இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்எஸ்ஐ பால்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் சாத்தான்குளத்தில் இன்று  கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சாத்தான்குளம் பஜாரில் பென்னிக்ஸ் கடையின் அருகில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் கனிமொழி எம்.பி., தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜெயராஜ்- பென்னிக்ஸ் படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாலையணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.அப்போது கனிமொழி எம்.பி. கூறுகையில், ‘‘ ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழக முதல்வர் உறுதுணையாக இருப்பர். இதில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார், இந்த வழக்கை கேரளாவுக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது’’என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *