Share on Social Media

இரண்டாம் அலையின்போது அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துவிட்டோம். எனவே, பொதுமக்கள், நிர்வாகம் அனைத்தும் அதிக கவனத்துடனும் செயல்பட வேண்டும். புதிய அலை தொடங்கிய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அதிக கவனத்துடன் அதைக் கையாள வேண்டும்” என்று விபின் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

இயற்பியலாளர் தெரிவித்தது போல இந்தியாவில் 3-ம் அலை தொடங்கிவிட்டதா என்று மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்:

“அகில இந்திய அளவில் மூன்றாவது அலை என்று கூறுவதெல்லாம் ஒருவகையான மாயத்தோற்றம் என்றுதான் கூற வேண்டும். ஏற்கெனவே டெல்லியில் கடந்த ஆண்டு ஜூலையில் முதல் அலை, அக்டோபரில் இரண்டாம் அலை, நவம்பர் – டிசம்பரில் 3-வது அலை, அண்மையில் 4-வது அலை முடிந்துவிட்டது. நோயாளிகளின் எண்ணிக்கையில் நேரும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு அலை என்று கூறப்படுகிறதே தவிர இதில் அறிவியல்பூர்வமாக எந்த வரையறையும் கிடையாது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *