Tamil News large 2644467 Tamil News Spot
Share on Social Media

பா.ஜ., போல் செயல்பட, காங்கிரஸ் ஒரு போதும் முயற்சிக்க கூடாது. அது கட்சியை, ‘ஜீரோ’வாக்கிவிடும். பா.ஜ.,வின் அரசியல் சிந்தனைகளை, காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. நாட்டின் மதச்சார்பின்மை கொள்கை, காங்கிரசில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்; நீர்த்து போகாது.

சசி தரூர், மூத்த தலைவர், காங்.,

ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், வெறுப்பை துாண்டும் வகையில் பேசுவதும், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தனிமனிதர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும் கூடாது.

ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,

பகுஜனுக்கு வாய்ப்பு தரலாமே!

ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தள அரசுகளை, பீஹார் மக்கள் பார்த்து விட்டனர். அதனால், இம்முறை எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் நடக்கும் இடைத்தேர்தல்களிலும், பகுஜன் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *