Share on Social Media


புதுடில்லி: ‘ஜி.எஸ்.டி., கவுன்சில் அரட்டை அரங்கமாக மாறிவிட்டது’ என, ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜி.எஸ்.டி.,யை புரிந்து கொள்ள 10 வழிகாட்டுதல்களைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘நல்ல சிந்தனையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி., தொடங்கப்பட்டது. பா.ஜ.க., அதைத் தவறான சட்டமாக மாற்றிவிட்டது’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

latest tamil news

மேலும், ‘ஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அடங்கிய குழு, நாய் ஆட்டும் வால் போல் ஆகிவிட்டது. ஜி.எஸ்.டி.,யின் சாரம்சமே புதைக்கப்பட்டு விட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் அரட்டை அரங்கமாக மாறிவிட்டது’ என, கடுமையாக விமர்சித்துள்ளார்.

ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இந்தக் கருத்துக்களை ஆங்கிலத்தில் பதிவிட்டார். அவற்றை ஹிந்தியில் மொழிபெயர்த்து தற்போது பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கள், டுவிட்டரில் கடும் கண்டனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *